Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

தஞ்சாவூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 73 ).இவருடைய மனைவி பத்மினி ( 67 ). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் மகள் குழந்தை ஸ்ரீநிதி ஆகிய நான்கு பேரும் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். செங்கிப்பட்டி அருகே தஞ்சை நோக்கி வந்த லாரி‌ பிரிவு சாலை அருகே திரும்பியது.அப்போது எதிர்பாராமல் கார் மீது லாரி திடீரென வேகமாக மோதியது இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. காரின் உள்ளே இருந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர் . உடனே அருகில் இருந்தவர்கள் காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!