கேரளாவில் பெரும் விபத்தில் இருந்து தாயும் சேயும் தப்பித்த வீடியோ வைரலாகியுள்ளது. சாலையின் ஓரத்தில் நின்ற காரில் இருந்து பெண் ஒருவர் குழந்தையுடன் வெளியே இறங்கினார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில், அப்பெண்ணும் குழந்தையும் உயிர்தப்பினர். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்!
