Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே மரத்தில் மோதி கார் விபத்து… டிரைவர் படுகாயம்…

கரூர் அருகே எதிரே வந்த ஆட்டோவில் மீது மோதாமல் இருக்க காரை திருப்தியை ஓட்டுநர்: மரத்தில் மீது மோதி விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 38) என்பவர் புலியூர் பகுதியில் நடைபெற்று வரும் கோவில் கட்டுமான பணிக்காக தனது காரில் பரமத்தி வேலூரில் இருந்து கரூருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் உள்ள சங்கரன்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ மீது மோ

தாமல் காரை திருப்பி உள்ளார். அதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்த சுரேஷ் பலத்த காயம் அடைந்தார். சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சுரேஷ் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!