Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

திருச்சியில் மளிகைகடை அருகே இறந்து கிடந்த முதியவர்

திருச்சி வயலூர்ரோடு அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை எதிரே சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசன் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்ற முழு விவரம் தெரியவில்லை. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்திய போது அவர் பெயர் பரமசிவம் (வயது 55) திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இந்நிலையில் பரமசிவம் எப்படி இறந்தார் என்பது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் திடீர் சாவு

கர்நாடகா மாநிலம் பெங்களூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சீனிவாச ராவ் (வயது 36) இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். கார் டிரைவர்.
இந்நிலையில் இவர் கடந்த நான்கு ஆண்டு காலமாக குடும்ப தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ந் தேதி பெங்களூருரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி திருவரங்கத்தில் இறக்கி விடுவதற்கு வந்துள்ளார். பிறகு பயணிகளை இறக்கி விட்டு திருவரங்கம் பஞ்சகரை சாலையில் காரைநிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்த போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தந்தார் அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாச ராவ் திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி ஏர்போர்ட் ஓம் சக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 67 ) இவருக்கு ஆல்பர்ட் வில்லியம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று
ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜேஸ்வரி பாண்டிச்சேரி செல்ல வேண்டுமென்று மகனிடம் கூறியுள்ளார். அதற்கு ஆல்பர்ட் வில்லியம் தனது தந்தையிடம் அனுமதி கேட்டு பெற்று விட்டு செல்லவும் என்று கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ராஜேஸ்வரி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பணமாக தூங்கிய ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!