சமூக ஊடக பதிவுகளுக்காக சாட்டை துரைமுருகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு நாதக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக MLA-க்கள் மீதான புகார்களில் நடவடிக்கையும் எடுக்காமல், அரசை விமர்சிப்போர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் MLA அருள் விக்னேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சியினர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு- சீமான் கண்டனம்
