Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டியிடம் 4 பவுன் செயின் மோசடி – திருச்சியில் வழக்குப்பதிவு

மூதாட்டியிடம் 4பவுன் செயின் மோசடி–திருச்சியில் வழக்குப்பதிவு

திருச்சி கே கே நகர் உடையான் பட்டி கவி பாரதி நகர் கோல்டன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி சுகந்தி (64. )இவரிடம் அவருக்கு நன்கு அறிமுகமான உடையான் பட்டி பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவர்
4 சவரன் தங்கச் சங்கிலியைப் பெற்றுக்கொண்டு, ஒரு வாரத்திற்குப் பிறகு அதைத் திருப்பித் தருவதாகக் கூறினார். ஆனால் சொன்னபடி நகையை திருப்பித் தரவில்லை. அதைத்தொடர்ந்து கடந்த 2025 ஜனவரி மாதம் தனது தங்கச் சங்கிலியை கேட்டபோது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, சங்கிலியை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள் என கூறிவிட்டார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூதாட்டி திருச்சி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி மோசடி பெண் மீது கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!