Skip to content
Home » காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

  • by Senthil

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

தென்னை வளர்ச்சி மேம்பாட்டுக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை தமிழகத்தில் உற்பத்தி செய்ய  ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு. பருத்தி உற்பத்தி 4.5 லட்சம் டன்னாக உயர்த்தப்படும். பயறு பெருக்க திட்டம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்.

பயறுவகை உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு

கோவையில் கருவேப்பிலை சாகுபடி அதிகாரிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.

கரும்பு விவசாயிகளுக்கு  சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்.

நெல் ஜெராமனின் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் திட்டத்திற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.

3 அல்லது 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்.

கரும்பு சாகுபடி மேம்பாட்டுக்கு  ரூ.10 கோடி ஒதுக்கீடு

சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன” “50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; இதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்” “தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும்” “ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும்” “சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன”

வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு”

தக்காளி  ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு.  வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க  செய்யும் நடவடிக்கைக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு.

காவிரி  டெல்டாவில் திருச்சி-நாகை இடையே வேளாண்  தொழில் பெருந்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரும் பணிக்கு ரூ.90 கோடி ஒதுக்கப்படும்.

ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும்.

25 லட்சம் மெட்ரிக் டன்  நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுரகத்திற்கு ரூ.75ம், சன்னரகத்திற்கு ரூ.100ம் கூடுதலாக வழங்கப்படும்.

ரூ.9 கோடியில்  உழவர்சந்தைகள் மேம்படுத்தப்படும்.

பூச்சிகள் அருங்காட்சியம் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!