Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி வெள்ளம்….. முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர்  1.7 லட்சம் கனஅடி   காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில்  முக்கொம்பு அணைக்கு சென்று காவிரி, கொள்ளிடத்தில் செல்லும் வெள்ளத்தை பார்வையிட்டார்.

இரு ஆறுகளிலும் எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால்  பாதிப்பு ஏற்படுமா, இதை சமாளிக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து நீர்வளத்துறை  பொறியாளர்களிடம் அமைச்சர் கேட்டார். இதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் அமைச்சர் அங்கிருந்து பச்சமலை புறப்பட்டு சென்றனர்.

அமைச்சர் உதயநிதியுடன், அமைச்சர்கள் கே. என். நேரு,  மகேஸ், சிவசங்கர்,  எம்.பி. அருண் நேரு மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் உடன் சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!