Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….

தஞ்சையில் முழுமையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்தகங்களை தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் இயங்கினாலும், குறைவான எண்ணிக்கையில்தான் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. பரபரப்பாக காணப்படும் தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு வணிகர்கள், அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பால் விற்பனை நிலையம், மருந்தகங்கள் மட்டும் இயங்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!