Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது.  288 பேரை இதுவரை பலி கொண்ட இந்த சங்கிலித்தொடர் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையின் பேரில் இதில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகாநாகா பஜார் ரெயில் நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மொஹந்தி, பாலோசோர் சிக்னல் பொறுப்பாளர் மஹந்தா, பொறியாளர் அமீர்கான், தொழில்நுட்ப நிபுணர்கள் பப்பு யாதவ், அபினாஷ் மொஹந்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னரே ரெயில் விபத்துக்கு காரணம் என்ன? என்பது தெரிய வரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!