Skip to content

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி என 4 பேர் விசாரணைக்காக ஆஜர்.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 19 ஆம் தேதியிலிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் இடம் விசாரணை மேற்கொண்டனர்.

இன்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி அதைத் தொடர்ந்து கரூர் டெக்ஸ் தொழில் அதிபர் மற்றும் நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன் உள்ளிட்டோர் நான்கு பேர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

குறிப்பாக கரூர் துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

error: Content is protected !!