Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

17ம் தேதி ஆஜராகிறேன்… செந்தில்பாலாஜி தகவல்

கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சார்பில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது இந்த நிலையில் இது குறித்து கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சமூக வலைதளம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்…

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..

வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்.. என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!