கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தெய்வத் திருமண விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு, மகா

அபிஷேக குழு சார்பில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், 28 ஆம் ஆண்டாங்க இந்தாண்டு வருடம் 16ஆம் தேதி அருள்மிகு

அலங்காரவல்லி, அருள்மிகு சௌந்தரநாயகி உடனாகிய அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வர சுவாமிக்கு தெய்வத் திருமண விழா நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடாக, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக முகூர்த்தக்கால் கொண்டு வரப்பட்டு, ஆலய வாசலில் பக்தர்கள் முன்னிலையில் நடப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடைபெற உள்ள திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
