Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

தஞ்சை நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி உஷா (60). கடந்த 10ம் தேதி இரவு தனது கணவருடன் உஷா பைக்கில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பைக்கில் நின்ற மர்மநபர்கள் 2 பேர் சட்டென்று உஷா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம்.

இதுகுறித்து உஷா  தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!