Skip to content

தஞ்சையில் சம்பங்கி பூவை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி உட்பட சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் வாசனைப்பூவான சம்பங்கி பூ சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பங்கி பூ விழாக்காலங்களில் அதிக விலைக்கு விற்பனையாவதால் அதிக பரப்பில் தற்போது விவசாயிகள் சம்பங்கி பூவை சாகுபடி செய்து வருகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பு திருக்கானூர்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகள் மானாவாரியாக இருந்தது. மழை பெய்தால் விவசாயம். இல்லாவிடில் வயல் தரிசாக கிடக்குமாம். பின்னர் கிணறு வெட்டி தண்ணீர் இறைத்து சாகுபடி செய்ய ஆரம்பித்தனர். அப்போதெல்லாம் நிலக்கடலை, உளுந்து, எள் சாகுபடிதான் இங்கு அதிகம் இருந்தது.

இலவச மின்சாரத்தால் பம்ப்செட் அமைத்து சாகுபடி செய்ய ஆரம்பித்த இப்பகுதி விவசாயிகள் ஆரம்ப காலத்தில் இந்த பகுதியில ரோஜா சாகுபடி, நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். தஞ்சை பூக்கார சந்தைக்கு போனா ரோஜாப்பூவுக்கு நிகராக பிற மாவட்ட பகுதிகளில் இருந்து சம்பங்கி பூ வந்து குவியும். ரோஜாப்பூவை தவிர்த்து வேறு சாகுபடி செய்ய நினைத்த விவசாயிகளுக்கு சம்பங்கி பூ சாகுபடி பற்றிய ஆர்வம் வர ஆரம்பத்தில் ஓரிரு விவசாயிகள் மட்டும் இதை செய்து வந்துள்ளனர்.

சம்பங்கி சாகுபடியில் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பித்ததால் தற்போது திருக்கானூர்பட்டியில் ஏராளமான வயல்களில் சம்பங்கி சாகுபடி தென்படுகிறது. கடந்த 6 வருஷத்துக்கு முன்னாடி திருக்கானூர்பட்டியில் ஓரிருவர் செய்து வந்த இந்த சம்பங்கி சாகுபடியை இப்போது பலரும் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

தொழுவுரம் வலுவாக போட்டுட்டா சம்பங்கி கிழங்கு பதியம் போட்டா அருமையா வளரும். அதற்கு பிறகு 2 முறை மீண்டும் உழவு செய்தால் மண் பொலபொலன்னு மாற்றிடும். வேப்பம் புண்ணாக்கை நிலம் முழுவதும் தூவினால் வயல் ரெடியாகிடும். அதுக்கு அப்புறம் சரியான இடைவெளியில் பார்களை அமைத்து அதாவது 3 முதல் மூன்றரை அடி விட்டு சம்பங்கி சாகுபடிக்கு கிழங்கை நிலத்தில் ஊன்றி சாகுபடி செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கிழங்கு தேவைப்படும். சம்பங்கி கிழங்கு ஒருமுறை வெளியில் இருந்து வாங்கறதுதான். அதற்கு பிறகு சாகுபடி செய்வதில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். சொட்டு நீர் பாசனம் அமைத்தால் போதும் கிழங்கு நன்கு வளரும். வயல் ஈரப்பதத்தோடு இருக்கும். இதுக்கு மேல தெளிப்பு நீர் குழாய் கிழக்கு வளர்ந்து சம்பங்கி செடி உயரமாக வரும் போது வெப்பம் அதிகம் இருக்க கூடாது. அதுக்காக தெளிப்பு நீர் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. இது தண்ணீர் செலவை குறைக்கிறது. செடிகள் 3 மாதத்திற்கு பின்னர் அறுவடை செய்யலாம். 3 மாதத்தில் ஒரு கிலோவில் இருந்து 3 கிலோ வரைக்கும் தினமும் அறுவடை செய்யலாம். நல்லா பூக்கும் தருணம் வரும் போது அதாவது 6லிருந்து 7 மாதம் வரை அறுடை செய்யலாம்.

முதல் அறுவடைக்கு தினமும் முதலில் 30 முதல் 35 கிலோவும், அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் 75 முதல் 90 கிலோ வரைக்கும் கிடைக்கும். விழாக்காலங்களில் இந்த பூவிற்கு ஏக மவுசு. இதனால் கூடுதல் விலைக்கு விற்பனையாகும். தஞ்சாவூர் பூச்சந்தையில் வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடலாம். உடனடியாக பணம் கிடைத்து விடுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் இந்த சாகுபடியை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!