தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இன்று (ஆக.13) நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், நாளையும் (ஆக.14) இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழை கொட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
