தமிழகத்தில் இன்று (அக்.14) 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
