Skip to content
Home » பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழரசூரை சேர்ந்தவர் சந்திரபோஸ் (56). இவர் கோவை PRO அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி-மகன்-மகள் ஆகியோர் உள்ளனர். குடும்பத்தினர் லால்குடியில் இருந்த நிலையில் போஸ் மற்றும் கோவையில் தனியாக அறை எடுத்து  தங்கியிருந்தார்.  கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த சந்திரபோஸ் நேற்று  வேலைக்கு செல்லவில்லை. இதனையடுத்து கோவை பிஆர் ஓ  அலுவலக ஊழியர்கள் போஸ்சுக்கு போன் அடித்தனர். அவர் எடுக்கவில்லை. இதனையடுத்து ஊழியர்கள் போஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர். கதவு உள்புறம் தாழ்ப்போட்டிருந்தது. வௌியில் செருப்பு இருந்தநிலையில் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்த சந்திரபோஸை ஊழியர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் சந்திரபோஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மறைந்த டிரைவர் சந்திரபோஸ் திருச்சி, அரியலூர் ஆகிய பிஆர்ஓ அலுவலகங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. டிரைவர் போஸ்சின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.  டிரைவர் போஸ் மறைவிற்கு etamilnews.com ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!