Skip to content
Home » பட்டையை கிளப்பிய ‘சந்திரமுகி2’ – கலெக்சன் எவ்வளவு தெரியுமா?….

பட்டையை கிளப்பிய ‘சந்திரமுகி2’ – கலெக்சன் எவ்வளவு தெரியுமா?….

  • by Senthil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு என பலர் நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’ இந்த படம் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கிட்டதட்ட 18 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தின் இயக்குநரான பி. வாசு இயக்கியுள்ளார்.  ராகவாலாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

photo

படம் வெளியாகி குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் முதல் நாளில், உலகம் முழுவதும் ரூ.7.5 கோடியை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் படம் ரூ.4.5 கோடி வசூலித்துள்ளது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!