Skip to content
Home » சந்திரமுகி 2 திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழு சாமி தரிசனம்…..

சந்திரமுகி 2 திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழு சாமி தரிசனம்…..

  • by Senthil

பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘சந்திரமுகி -2’ திரைப்படம் வெற்றியடைய வேண்டி படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பேடம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!