Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சந்திரயான்-3 …விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படங்கள்….

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. பின்னர் கடந்த 18ம் தேதி விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது. பின்னர்

இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை நேற்று அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!