Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

திருப்பதியில் இருந்து இன்று மாலை 6:05 க்கு சென்னை வர வேண்டிய சப்தகிரி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11 மணிக்கு ஈரோடு கிளம்பும் ஏற்காடு விரைவு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9:15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு விரைவு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4:35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி விரைவு ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

கனமழை காரணமாக நாளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!