Skip to content
Home » சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், அவர்களின் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கடந்த 01.01.2024 முதல் 17.01.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 21 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 2 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 34 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 11.01.2024 முதல் 17.01.2024 வரையிலான ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் சுதா (எ) சுதாகர், வ/27, த/பெ.சுரேஷ்குமார், புரசைவாக்கம், சென்னை என்பவர் கத்தியை காட்டி தகராறு செய்த குற்றத்திற்காக, G-5 தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்திலும், சங்கர் (எ) சிவசங்கரன், வ/35, த/பெ.ராஜா, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை, சாந்தகுமார், வ/24, த/பெ.ஜெகநாதன், காவாங்கரை, புழல், சென்னை மற்றும் நாராயணன், வ/23, த/பெ.பழனி, காந்திநகர் 8வது தெரு, புளியந்தோப்பு, சென்னை ஆகிய மூவரும் கடந்த 19.12.2023 அன்று பிரேம்குமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, G-2 பெரியமேடு காவல் நிலையத்திலும்,சுதிர் தண்டன்,வ/39, த/பெ.சந்திரமோகன், காந்தி நகர், குஜராத் மாநிலம் என்பவர் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவிலும்,ஆனஸ்ட்ராஜ், வ/31, த/பெ.முனிவேல், குரோம்பேட்டை, சென்னை என்பவர் கடந்த 09.12.2023 அன்று கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக C-3 ஏழுகிணறு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் தனசேகர் (எ) பார்த்திபன், வ/34, த/பெ.திருமலை, காவாங்கரை, புழல் என்பவர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக M-1 மாதவரம் காவல் நிலையத்திலும், தீனா, வ/25, (K-10 p.s. H.S.), த/பெ.கண்ணன், நெற்குன்றம், சென்னை மற்றும் சிரஞ்சீவி, வ/27, த/பெ.கிருபாகரன், ராமாபுரம், சென்னை ஆகியோர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக, R-11 ராமாபுரம் காவல் நிலையத்திலும், ஷேக் முகமது மாதர், வ/28, த/பெ.ஷாகுல் ஹமீது, இராயப்பேட்டை, இப்ராகிம் (எ) இபு, வ/26, த/பெ.ரஹீம், இராயப்பேட்டை ஆகிய இருவரும் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்திலும், மாறன், வ/45, த/பெ.மாணிக்கம், ஆணையூர், மதுரை மாவட்டம் என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த குற்றத்திற்காக, மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சுதா (எ) சுதாகர், சங்கர் (எ) சிவசங்கரன், சாந்தகுமார், நாரயணன், சுதிர் தண்டன், ஆனஸ்ட்ராஜ் ஆகிய 6 நபர்களை கடந்த 11.01.2024 அன்றும், தனசேகர் என்பவரை 12.01.2024 அன்றும், தீனா, சிரஞ்சீவி, ஷேக் முகமது மாதர், இப்ராகிம் (எ) இபு மற்றும் மாறன் ஆகிய 5 நபர்களை கடந்த 13.01.2024 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், மேற்படி 12 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!