Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சென்னை குரோம்பேட்டை மற்றும்  பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு ரயில் மோதி உயிரிழந்தனர். சென்னை குரோம்பேட்டையில் ரயிலில் அடிபட்டு பிரணவ் (23), சதீஷ் (39) ஆகியோர் உயிரிழந்தனர். சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்ததை அடுத்துசொந்த ஊருக்கு செல்ல பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!