Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

​பாம்பின் பிடியில் சிக்கிய கோழி உயிருடன் மீட்பு

தொண்டாமுத்தூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்த மலைப்பாம்பு: கோழியை உயிருடன் மீட்ட வனத்துறையினர் !!!

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப் பாம்பால் பரபரப்பு நிலவியது.

வீட்டின் இருந்த கோழியைத் தனது பிடியில் சிக்க வைத்து, விழுங்குவதற்குத் தயாராக இருந்த அந்தப் பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வனத்துறையினருக்குச் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மிகவும் சாதுர்யமாகவும், பாதுகாப்பாகவும் அந்த மலைப்பாம்பைப் பிடித்தனர்.

​பாம்பின் பிடியில் இருந்து கோழி உயிருடன் மீட்கப்பட்டது, அங்கு இருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாகத் திகழும் வனவிலங்குகள், அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் புகுவது கோவை புறநகர் பகுதிகளில் வாடிக்கையாகி விட்டாலும், இத்தனை துரிதமாக மீட்புப் பணி நடைபெற்றது அப்பகுதி மக்கள் இடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

பிடிபட்ட மலைப்பாம்பு காயங்கள் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதனை அருகில் உள்ள பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடுவிக்க கொண்டு சென்றனர்.

error: Content is protected !!