Skip to content
Home » சிதம்பரம் மக்களவை….. சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்

சிதம்பரம் மக்களவை….. சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு முடிவுற்றது இதன் விவரம் தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி : 76.37 %

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 7 53, 643 ஆண் வாக்காளர்களும் 7,66,118 பெண் வாக்காளர்களும், 86 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 15,19,847 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று 5 லட்சத்து 56 ஆயிரத்து 882 ஆண் வாக்காளர்களும், 6,03,726 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து 11,60,635 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்தி உள்ளனர். மொத்த வாக்கு 76.37 சதவீதமாகும். இதில் ஆண் வாக்காளர்கள் 73.89 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 78.8 சதவீதமும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 31.4 சதவீதம் ஆகும்.

சட்டமன்ற வாரியாக வாக்குப்பதிவு விபரம்

குன்னம் சட்டமன்றம் : 76.80 %

குன்னம் சட்டமன்றத்தில் 1,35,340 ஆண் வாக்காளர்களும், 1,38,423 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2,73,764 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று 96,312 ஆண் வாக்காளர்களும், 1,13,941 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் சேர்த்து மொத்தம் 2,10,254 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். குன்னம் சட்டமன்றத்தில் மொத்தமாக 76.80 வாக்கு சதவீதமும், ஆண்கள் 71.16 சதவீதமும், பெண்கள் 82.31 சதவீதம், மூன்றாம் பாலின வாக்காளர் 100 சதவீதமும் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர்.

அரியலூர் சட்டமன்றம் : 81.61 %

அரியலூர் சட்டமன்றத்தில் 1,29,901 ஆண் வாக்காளர்களும், 1,30,278 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2,60,185 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று 1,02,055 ஆண் வாக்காளர்களும், 1,10,273 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலின வாக்காளரும் சேர்த்து மொத்தம் 2,12,333 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். அரியலூர் சட்டமன்றத்தில் மொத்தமாக 81.61 வாக்கு சதவீதமும், ஆண்கள் 78.56 சதவீதமும், பெண்கள் 84.64 சதவீதமும், மூன்றாம் பாலின வாக்காளர் 83.33 சதவீதமும் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்றம் : 78.47 %

ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் 1,28,643 ஆண் வாக்காளர்களும், 1,29,882 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2,58,532 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று 97,520 ஆண் வாக்காளர்களும், 1,05,347 பெண் வாக்காளர்களும், சேர்த்து மொத்தம் 2,02,867 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் மொத்தமாக 78.47 வாக்கு சதவீதமும், ஆண்கள் 75.81 சதவீதமும், பெண்கள் 81.11 சதவீதமும், தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர்.

புவனகிரி சட்டமன்றம் : 75.46 %

புவனகிரி சட்டமன்றத்தில் 1,24,326 ஆண் வாக்காளர்களும், 1,26,660 பெண் வாக்காளர்களும், 26 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2,51,012 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று 93,442 ஆண் வாக்காளர்களும், 95,963 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளரும் சேர்த்து மொத்தம் 1,89,415 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். புவனகிரி சட்டமன்றத்தில் மொத்தமாக 75.46 வாக்கு சதவீதமும், ஆண்கள் 75.16 சதவீதமும், பெண்கள் 75.76 சதவீதமும், மூன்றாம் பாலின வாக்காளர் 38.46 சதவீதமும் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர்.

சிதம்பரம் சட்டமன்றம் : 71.68 %

சிதம்பரம் சட்டமன்றத்தில் 1,20,473 ஆண் வாக்காளர்களும், 1,25,032 பெண் வாக்காளர்களும், 33 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2,45,538 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று 85,027 ஆண் வாக்காளர்களும், 90,958 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளரும் சேர்த்து மொத்தம் 1,75,995 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். சிதம்பரம் சட்டமன்றத்தில் மொத்தமாக 71.68 வாக்கு சதவீதமும், ஆண்கள் 70.58 சதவீதமும், பெண்கள் 72.75 சதவீதமும், மூன்றாம் பாலின வாக்காளர் 30.30 சதவீதமும் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றம் : 73.55 %

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்தில் 1,14,960 ஆண் வாக்காளர்களும், 1,15,843 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2,30,816 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று 82,526 ஆண் வாக்காளர்களும், 87,244 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் சேர்த்து மொத்தம் 1,69,771 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்தில் மொத்தமாக 73.55 வாக்கு சதவீதமும், ஆண்கள் 71.79 சதவீதமும், பெண்கள் 75.31 சதவீதமும், மூன்றாம் பாலின வாக்காளர் 7.69 சதவீதமும் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர்.

குறிப்பு ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஏழு பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் கூட நேற்று வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!