18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையே வெல்லாத அணியாக இருந்த பெங்களூர் அணி, முதல் முறையாக தனது கோப்பை கனவை நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெங்களூர் அணி வெற்றியை ருசித்துள்ளது.
பெங்களூர் அணி கோப்பை வென்ற நிலையில், ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர். கோப்பை வென்றுள்ள பெங்களூர் அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்சிபி அணிக்கும், விராட் கோலிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து பதிவில், “கோப்பை வென்ற பெங்களூர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்திற்காக காத்திருந்த விராட் கோலிக்கு வாழ்த்து. அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி முழு பலத்துடன் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பெங்களூர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
