காவிரி டெல்டா பாசனத்திற்காகச் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று மதகுகளைத் திறந்து வைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 3,000 கனஅடி நீர்

திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கமான ஜூன் 12 தேதியிலிருந்து 80 நாட்களுக்குப் பிறகு இந்தத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர்


அணையில் முதல்வர் விஜய் மலர்தூவி தண்ணீர் திறந்து வைத்தார். அணையிலிருந்து திறக்கப்பட்டதும் வெளியேறிய காவிரி நீரில் மலர்தூவி வரவேற்றார். அடுத்த 45 நாள்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி படுகை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. 100 நாட்களுக்காவது தண்ணீர் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். படிப்படியாக தண்ணீர் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் மலர்களை தூவி விவசாயிகளுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் இந்த அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன் பங்கேற்றுள்ளனர்.
