Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரீல்ஸ் அரசு நடத்தும் முதல்வர் விஜய்!- கரூரில் செந்தில் பாலாஜி ஆவேசம்

கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட திமுக சார்பில் தவெக அரசை அரசு மற்றும் முதலமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தனது ஆட்சியின் தேர்தலுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆணவமாகவும் கொச்சையாகவும் பேசி ரீல்ஸ் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் முதல்வர் செயலற்ற

முதலமைச்சராக இருப்பதாகவும் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1500 க்கு மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். கரூர் மாநகரப் பகுதியில் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 116 நாள் ஆட்சியைக் கண்டித்து, கரூரில் திமுக சார்பில்

பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,MLA முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடினார்.

“சட்டமன்றத்தில் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் 3 நாள் அவகாசம் கேட்டு ஓடியவர் தான் இந்த முதல்வர். விலைவாசி உயர்வு, மின்வெட்டு என மக்கள் அவதிப்படுகிறார்கள். ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவதுதான் இந்த அரசின் சாதனையா? மேட்டூருக்கு தண்ணீர் திறக்க வந்த முதல்வர் விஜய்க்கு ரூ.6 கோடி மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. பதவி

விலகிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடிக்கு விலைபோய்விட்டாரா என மக்கள் கேட்கிறார்கள்.”

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு இரவு நேரத்தில் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர் திமுக ஆட்சியில் இருக்கும் போது ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு நாளும் இரவு நேரங்களில் மின்வெட்டியில் இருந்ததில்லை தமிழக வெற்றி கழகம் பொருத்தவரை
இந்த அரசாங்கம் பொருத்தவரைக்கும் ரீல்ஸ் ஆச்சு தான் ரியல் ஆச்சி இல்லை. ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு தவெக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியதால், கரூர் தபால் நிலையப் பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!