Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை முதல்வர் விஜய் கரூர் வருகை… அமைச்சர் ஆனந்த் ஆய்வு

நாளை முதல்வர் விஜய் கரூர் வருகை... அமைச்சர் ஆனந்த் ஆய்வு

நாளை தமிழக முதல்வர் கரூர் வருகை: மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை அமைச்சர் ஆனந்த் ஆய்வு.

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் நாளை கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார் இதனை முன்னிட்டு கரூர் வெண்ணைமலை அருகே உள்ள அட்லஸ்

கடையரங்கம் மைதானத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் 5000 பொதுமக்கள் அமரும் வகையில் மாபெரும் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றிலும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு பொதுமக்கள் உள்ளே வரும் வழி மற்றும் வெளியே வரும் வழியைத் தவிர மற்ற அனைத்து

பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இறுதி கட்ட பணி மும்முறமாக நடைபெற்று வருகின்றது .

இந்த நிலையில் தவெக மாநில பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

மேலும் முதல்வர் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதை மற்றும் முதல்வர் நின்று பேசும் இடம் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் நாளை முதலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு கரூர் நகர பகுதி வழியாக சென்று தான்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துயர சம்பவத்தின் போது உயிரிழந்த 41 குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு தகுதி உடைய நபர்களுக்கு அரசு பணி ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு காணொளி காட்சி வாயிலாக தனியார் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தை திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!