Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் முதல்வர் நிகழ்ச்சி…பிரஸ்க்கு அனுமதி இல்லை

கரூர் முதல்வர் நிகழ்ச்சி...பிரஸ்க்கு அனுமதி இல்லை

முதல்வர் விஜய் பங்கேற்கும் கரூர் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் அரங்கில் இருந்து
வெளியேற்றப்படுகின்றனர். முதல்வரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் செல்கிறார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின்
குடும்பத்தினரைச் சந்திக்கிறார்.
இதற்காக கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர் ஜோசப் விஜய், சாலை வழியாக கரூர் செல்கிறார். கரூர் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ்

கலையரங்கில் நடைபெறும் 5,000 பேர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஊடகங்கங்களுக்கு அனுமதி இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. கரூர் ஆட்சியர் சார்பில் செய்தியாளர்களுக்கு தனி பாஸ் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கரூர் நிகழ்ச்சி அரங்கில் இருந்த செய்தியாளர்கள்,
ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் நேரடியாக அங்கு வந்து ஊடகவியலாளர்களை வெளியேற அறிவுறுத்தி வருகிறார். இந்நிகழ்வில் இருந்து செய்தியாளர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்க பாஸ் தரப்பட்ட நிலையில் வெளியற்றம். விஜய் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனக்கூறி செய்தியாளர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜயுடன் ஒரு டீம் எடுக்கும் வீடியோக்கள் மட்டுமே சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என கரூர் எஸ்பி வௌியேறும்படி பத்திரியாளர்களை வௌியே செல்லும்படி உத்தரவிட்டார். ஏற்கனவே கரூர் பிஆர்ஓ அலுவலகம் முதல்வர் நிகழ்ச்சியை படம் எடுக்க பத்திரிக்கையாளர்களுக்கு விசேசமாக பாஸ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!