ஆதியோகி சிவன் தனது சீடர்களுக்கு யோக அறிவியலை வழங்கிய நாளான குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாடுகளும் தியான நிகழ்வுகளும் நடைபெற்றன.
முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்கள் நீண்ட நாட்களாக சத்குருவின் தீவிர பக்தராகவும், ஈஷா தியான அமைப்பின் தொடர் பின்பற்றுபவராகவும் இருந்து வருகிறார்.
ஆசிரம வளாகத்தில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் 112 அடி உயர ஆதியோகி

சிலை ஆகிய புனித இடங்களுக்குச் சென்று அவர் தரிசனம் செய்தார்.
இவ்விழாவின் போது அங்கு நடைபெற்ற ஆன்மீக இசை நிகழ்ச்சிகள் மற்றும் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற கூட்டுத் தியான நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்தார். பின்னர் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.
தன்னுடைய ஆன்மீகப் பயணத்தில் ஈஷா மையம் தனக்கு ஒரு மறுபிறவியாக அமைந்தது என்று அவர் ஏற்கனவே பல நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
