Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தை விற்பனை வழக்கு: 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை!

குழந்தை விற்பனை வழக்கு: 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை!

தாயே பிறழ் சாட்சியம் அளித்த போதும் தூக்கிலாடிய அரசு தரப்பு வாதம்: வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்தது கோவை நீதிமன்றம்!

​ சொந்த மகளையே கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி, தாய்க்குத் தெரியாமல் ரூ.2.25 லட்சத்திற்கு விற்பனை செய்த கணவன் மற்றும் அவனது கூட்டாளிகள் 6 பேருக்குத் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்து உள்ளது.

கடந்த 28.07.2015 அன்று, வழக்கின் புகார்தாரரான மீனா என்பவரை, அவரது கணவர் ராமன் மற்றும் அவரது நண்பர் குமாரசாமி ஆகியோர் கன்னியாகுமரிக்குச் சுற்றுலா செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று உள்ளனர்.

​அங்குத் தரகர் தங்கசாமி என்பவர் மூலம், கன்னியாகுமரியில் செவிலியராகப் பணியாற்றி வந்த ரீட்டா என்பவரின் உதவியுடன், குழந்தைகள் இல்லாத விஜயகுமார் – ராணி பிரபா தம்பதியருக்கு, தாய் மீனாவுக்குச் சற்றும் தெரியாமல் அவரது 1 வயது பெண் குழந்தையை ரூ.2,25,000/-க்கு விற்று உள்ளனர்.
​பின்னர், குழந்தை திடீரெனக் காணாமல் போய் விட்டதாக நாடகமாடி உள்ளனர். சந்தேகம் அடைந்த தாய் மீனா உடனடியாகக் காவல் துறையை அணுகி உள்ளார். சம்பவம் கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திட்டமிடப்பட்டு நடைபெற்றதால், E2 பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் சுழற்சி முறையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, வழக்கின் புகார்தாரரான தாய் மீனாவே நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியமாக (Hostile Witness) மாறினார்.
​இருப்பினும், அறிவியல் பூர்வ சாட்சியங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில், அரசு தரப்பு வழக்கறிஞர் ராமன் மிகத் திறம்படச் சட்டப்பூர்வ வாதங்களை முன்வைத்தார்.

வழக்கின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று (28.10.2026) தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகுமார் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கினார்.

​குற்றம் சாட்டப்பட்ட
​ராமன் (கணவன்)
​குமாரசாமி (நண்பன்)
​தங்கசாமி (தரகர்)
​ரீட்டா (செவிலியர்)
​விஜயகுமார்
​ராணி பிரபா
​ஆகிய 6 பேரையும் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து,

ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

தாயே சாட்சியம் மாறினாலும், வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்து, எதிரிகளைக் கைது செய்த அன்றைய E2 பீளமேடு காவல் ஆய்வாளர் கோபி, கோவை மாநகர ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, மற்றும் நீதிமன்றப் பணிகளைச் மேற்கொண்ட தலைமைக் காவலர்கள் HC 914 சுப்பிரமணியம், HC 1935 சுரேஷ்வரன் ஆகியோரை உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

​11 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த அதிரடித் தீர்ப்பு, குழந்தை கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு மிக முக்கிய எச்சரிக்கையாக அமைந்து உள்ளது.

error: Content is protected !!