Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் குழந்தைகள் தினம்… கேக் வழங்கிய அமைச்சர் வினோத்

தஞ்சையில் குழந்தைகள் தினம்... கேக் வழங்கிய அமைச்சர் வினோத்

குழந்தைகள் தினத்தையொட்டி கும்பகோணத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வேளாண்துறை அமைச்சர் வினோத் கேக் மற்றும் முதலமைச்சரின் வாழ்த்து அட்டை வழங்கி குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று

தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, தஞ்சை மாவட்டத்தில் 1670 பள்ளிகளில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 634 மாணவ, மாணவிகளுக்கு தல இரண்டு கேக்குகள் வீதம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 268 கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.

கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை துறை அமைச்சர் வினோத் பள்ளி மாணவிகளுக்குச் கேக் மற்றும் முதலமைச்சரின் வாழ்த்து அட்டைகளை வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

error: Content is protected !!