Skip to content
Home » திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றாலும் சலுகை உண்டு… சீனா அதிரடி

திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றாலும் சலுகை உண்டு… சீனா அதிரடி

சீனாவில் சமீபத்தில் ஆண்டுகளாக சில ஆண்டுகளாகக் குழந்தைகளின் பிறப்பு விதமானது தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதமானது அதிகமாக உள்ளது. இதன் காரணமாகக் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீனாவில் மக்கள் தொகையானது மிகவும் குறைந்துள்ளது.

நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகச் சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சீன நாட்டில் ஒரே குழந்தை என்று கொள்கை அமலிலிருந்தது. தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்தாண்டு முதல் சீனாவில் இருக்கும் தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் எனச் சீன அரசு அனுமதி வழங்கியது.

இருந்த போதும் சீனாவில் பிறப்பு விதமானது உயரவில்லை. இந்த நிலையில் சீன நாட்டில் தென்மேற்கு மாகாணமான சிச்சு வானில் திருமணம் ஆகாதவர்கள் சட்டப்பூர்வமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அந்த மாகாணத்தின் அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதுவரை குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் சலுகைகள், மானியங்கள் போன்றவை அனைத்தும் திருமணமாகாமல் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புதிய விதிமுறைகள் வருகிற 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமானவர்களும் மற்றும் ஆகாதவர்களும் எவ்வளவு குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப ஆண்டுகளாக இந்த மாகாணத்தில் பிறப்பு விதம் குறைந்துள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். சீனாவில் சிச்சுவான் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ள மாகாணமாகும். மக்கள் தொகையில் 21% அதிகமானவர்கள் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சீனாவில் ஏழாவது இடத்தில் இந்த மாகாணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!