Skip to content
Home » சிதம்பரம் நாடாளுமன்றம் : 12 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…..

சிதம்பரம் நாடாளுமன்றம் : 12 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் நேற்று திங்கள் கிழமை முதல் தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று அதிமுக சார்பில் சந்திரகாசன் மற்றும் அதிமுக மாற்று வேட்பாளராக அவரது மகன் ராஜ்குமார் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளராக கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தைச் சேர்ந்த ஏழைகள் முன்னேற்ற கழக வேட்பாளராக அர்ஜுனன் மற்றும் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரும் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை ஐந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ப்பட்டிருந்தது.

இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் வேட்பாளராக ஜான்சி ராணியும், அக்கட்சியின் மாற்று வேட்பாளராக ரஞ்சனியும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பாரதிய ஜனதா கட்சி சார்பாக அதன் வேட்பாளராக கார்த்தியாயினியும், மாற்று வேட்பாளராக பிருந்தா ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் (CPI ML)சிபிஐ எம்.எல் கட்சி சார்பில் ராதா என்பவரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நீலமேகம் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுயேட்சையாக அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து இன்று வரை 12 வேட்பாளர்கள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். நாளை திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். நாளை மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இன்று வரை 12 வேட்பாளர்கள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தங்களது தாக்கல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!