Skip to content
Home » சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி

சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி

வேலூர் நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்கு 2012-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அமைச்சர் வி.எஸ். விஜயிடம் வேலை பார்த்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் அனுஷ்குமாரின் மனைவி கார்த்தியாயினி அதிமுக சார்பில் வேட்பாளராக தேர்வானார். பி.ஹெச்.டி ஆய்வில் இருந்த கார்த்தியாயினி உடனடியாக அதிமுக உறுப்பினராகி தேர்தலை எதிர்கொண்டார். அத்தேர்தலில் நேரடியாக பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையில் தேர்தலை எதிர்கொண்ட கார்த்தியாயினி 1,08,127 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி 82,139 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். 25,988 வாக்குகள் பெற்று வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக அதிமுக சார்பில் கார்த்தியாயினி பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு, நான்கு ஆண்டு சிறைத்தண்டனையோடு, அபராதமும் விதித்து பெங்களுரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வெளியானபோது, தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளவுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டவர் கார்த்தியாயினி. ஏன்என்றால் வேலூர் மாநகர முன்னாள் மேயரான இவர், அந்தச் சமயத்தில் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவையும், அவரது தீர்ப்பையும் விமர்சித்து மாநகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் கார்த்தியாயினி. ‘கார்த்தியாயினியின் இந்தத் தீர்மானம், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்’ என கடும் கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், கர்நாடக நீதிமன்றத்திலும் அவரது பெயரில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, ‘அவர் பகிரங்க மன்னிப்பைக் கேட்க வேண்டும்’ என்று அறிவித்தது நீதிமன்றம். பின்னர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார் ‘கார்த்தியாயினி.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எந்த அணியிலும் சேர்த்துக் கொள்ளப்படாததால் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி, பி.ஜே.பி தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதிமுக முன்னால் அமைச்சர் நயினார் நாகேந்திரன், முன்னால் அதிமுக எம்எல்ஏ ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் முன்னால் அதிமுக மேயர் கார்த்தியாயினி உள்ளிட்ட 15பேர் கடந்த 2017 ஆகஸ்ட் 26ம்தேதி பாஜகவில் இணைந்தார்.

கடந்த 05.06.2002ம் ஆண்டு பாஜவிற்கு பொருப்பாளர்கள் அறிவிக்கப்பட்டபோது பாஜக மாநில பொதுச்செயலாளர்களில் கார்த்தியாயினியும் இடம் பெற்றார். மேலும் பாஜக வேலூர் பெருங்கோட்ட பொருப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக அடையாளம் காணப்படும் கார்த்தியாயினி சோசியல் மீடியாக்களில் அதிகம் பாஜகவின் திட்டங்களை கொண்டு செல்பவராகயும் உள்ளார். இந்நிலையில் தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கார்த்தியாயினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!