கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு சம்பவம் நடைபெற்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 9 காவலர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

