Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் தச்சர் தெருவில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வராமல் இருந்துள்ளது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் முத்துவாஞ்சேரி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரியலூர் – தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரமங்கலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!