Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

சென்னை கிண்டி மருத்துவமனையில்,  டாக்டர்  பாலாஜி என்பவரை, நோயாளி(பிரேமா)யின் மகன் கத்தியால் குத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது அதிர்ச்சியை  வெளியிட்டு உள்ளார்.  இது தொடர்பாக  முதல்வர் வெளியிட்டுள்ள  செய்தியில் கூறியிருப்பதாவது:

பணியின்போது மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நம் அனைவரின் கடமையாகும். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர்  உடனடியாக கைது செய்யப்பட்டார்.  அரசு மருத்துவமனைகளை  நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் சிகிச்சை அளிப்பதில் நமது  அரசு  மருத்துவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

மருத்துவர்  பாலாஜிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.  இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!