Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர்களுக்கு காதுகள் இல்லை…வாய் மட்டுமே உண்டு…. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘கவர்னர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே… பாஜக அரசின் கவர்னர்கள் இதற்கு செவிமடுப்பார்களா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“இதுவரையிலான செயல்பாடுகளை பார்க்கும்போது, கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” என்று கூறினார்.

oல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை; வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

டில்லி துணை முதல்-மந்திரி மணீஷ் கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக ஜெயிக்கலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக்கூடாது.” என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!