Skip to content
Home » முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு… திடீரென புகுந்த பாம்பு…. வீடியோ வைரல்

முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு… திடீரென புகுந்த பாம்பு…. வீடியோ வைரல்

  • by Senthil

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த கூட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், அங்கிருந்தவர்கள் ஓட முயற்சித்தனர். அப்போது, எந்த வித பதற்றமுமின்றி முதல்வர் பூபேஷ் பாகல் அசால்ட்டாக நின்றார். மேலும், கவலைப்பட வேண்டாம். பாம்பை யாரும் அடிக்கவும் வேண்டாம்’ என்றார். சிறிது நேர பரபரப்பிற்கு பின் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சென்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!