Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு..

ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் கோவை வந்தார்.  விமானநிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, மாவட்ட கலெக்டர்  கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா , துணை மேயர் வெற்றிச்செல்வன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், , கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதல்வர் இன்று ஈரோடு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இரவு மீண்டும் விமானம் மூலம் சென்னை செல்கிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!