Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை பொருட்கள் ஒழிப்பதில் அனைவரும் கைக்கோப்போம்… .முதல்வர் டிவிட்….

சென்னை பெருநகர காவல்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த டுவீட்டை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளைச் செய்திட வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறேன்.

இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். பாராட்டுகள்! போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம்!” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!