Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின் லண்டன் பயணம்..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு மூலம் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே முதல்வரின் பயணத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெளிநாட்டு பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் லண்டன்  செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!