Skip to content
Home » தஞ்சையில் ரூ.140 கோடி பணிகள்…. முதல்வர் ஸ்டாலின் நாளை அர்ப்பணிப்பு

தஞ்சையில் ரூ.140 கோடி பணிகள்…. முதல்வர் ஸ்டாலின் நாளை அர்ப்பணிப்பு

  • by Senthil

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள ரூ.140 கோடி மதிப்பிலான   மாநாட்டு மைய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை  மாலை தொடங்கி வைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.61.79 கோடி மதிப்பில்  தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மாநாட்டு மையம் கட்டிடம், ரூ.10.46 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம், ரூ.4.39 கோடியில் ராஜகோரி மயானத்தில் எரிவாயு தகன மையம், ரூ.7.32 கோடியில் மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், ரூ.15.69 கோடியில் சூரியஒளி மின்நிலையம் , ரூ.11.50 கோடியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பூங்கா (STEM Park) , ரூ.2.61 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் ரூ.15.61 கோடியில் காந்திஜி வணிகவளாகத்தை மேம்படுத்தும் பணி.

ரூ.2,25 கோடியில் கருணா சுவாமி குளம் மேம்படுத்தும் பணி, ரூ.1.44 கோடியில் அழகிகுளம் மேம்படுத்தும் பணி,ரூ.2.95 கோடியில் பெத்தண்ணன் கலையரங்கத்தை தியேட்டராக மாற்றும் பணி, ரூ.1.50 கோடியில் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம், ரூ.1.50 கோடியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேன்சர் வார்டு பகுதியில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம், ரூ.1.50 கோடியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீப்புண் வார்டு பகுதியில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம் கட்டும் பணி என மொத்தமாக ரூ.140 கோடியில்  பல்வேறு பணிகள்  செய்து முடிக்கப்பட்டன. இந்த கட்டிடங்களை நாளை மாலை 5 மணி அளவில்  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் நேற்ற மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி ஜெயச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மற்றும் ஏடிஎஸ்பி, டிஎஸ்பிகள், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!