கரூரில், மாவட்ட திமுக மற்றும் இளைஞரணி, மகளிர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் திமுக கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதைத் தொடர்ந்து கரூர் கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் இன்று பிறக்கும்
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், திமுக இளைஞரணி சார்பில் கரூர் ரத்த வங்கியில் ரத்ததானம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து புஞ்சைப்புகளுர், வாங்கல், புலியூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, பரமத்தி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 200 இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நலத் திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.