Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்…. ஆதரவற்றோர் இல்லத்தில் நலதிட்ட உதவி- கறிவிருந்து..

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்…. ஆதரவற்றோர் இல்லத்தில் நலதிட்ட உதவி- கறிவிருந்து..

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் தமிழக முழுவதும் உள்ள ஏழை எளியவர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று நாகையில் எளிமையாக கொண்டாடப்பட்டது. நாகை நகராட்சி தலைவரும், திமுக நகர கழக

செயலாளருமான மாரிமுத்து தலைமையில், நடைபெற்ற பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில், நாம்கோ ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கி பயிலும் பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவிகளுக்கும், முதியோருக்கும் கறி விருந்துடன் உணவு வழங்கினர். அப்போது ஆதரவற்றோர் இல்ல மாணவிகள், முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பாடலை பாடி வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!