Skip to content
Home » குபீர் நாட்டுபற்றாளர்…..நஞ்சு தோய்த்து நயமாக பேச்சு….. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

குபீர் நாட்டுபற்றாளர்…..நஞ்சு தோய்த்து நயமாக பேச்சு….. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை, மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமி நாதன், சென்னை மாநகர மேயர் ப்ரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்

இந்த நிலையில், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; “தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக! சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ம் ஆண்டு!

கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவண்ணத்தில் ‘தென்பாண்டிச் சிங்கம்’ எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது. தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்.” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!