Skip to content
Home » மாநிலக் கல்வி கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கபடும்- பொன்முடி

மாநிலக் கல்வி கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கபடும்- பொன்முடி

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘சமூக நீதிக் காவலர் கலைஞர் குழு’ ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சு.ப.வீரபாண்டியன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கிடையே பேச்சுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகள் அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 3000,2000,1000 வீதம் பரிசுகள் வழங்கப்படும்‌. தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழக அளவில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்பரிசு 10,000, இரண்டம் பரிசு 6000, மூன்றாம் பரிசாக 4000 ரூபாய் என பரிசுகள் வழங்கப்படும்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெருவோருக்கு முதல் பரிசாக 1 லட்சமும் இரண்டாவது பரிசாக 75 ஆயிரமும் மூன்றாவது பரிசாக 50 ஆயிரம் வழங்கப்படும். கலைஞரும் தமிழும், கலைஞரும் சமூக நீதியும், கலைஞரும் அரசியல் அதிகாரமும், கலைஞரும் பெண்ணியமும், கலைஞரும் அறிவயலும் என்ற தலைப்புகளில் இந்த பேச்சுப் போட்டிகள் நடைபெறும் கலைஞர் வரலாற்றை மாணவர்கள் தெரிந்த கொள்ளும் வகையில் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. விழுப்புரத்தில் நடைபெறும் கண்காட்சியில் குறும் காணொலி மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறும். இதற்காக 25 லட்சம் ரூபாய் அரசுத்துறை நிதி ஒதுக்கியுள்ளது எனவும் தனியார் கல்லூரிகளும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பார்கள். இதை தொடர்ந்து மாநிலக் கல்வி  கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!